வியாழன், 6 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மார்ச் 2025 (12:12 IST)

ஒரே க்ரவுண்டுல விளையாடினா மட்டும் பத்தாது.. திறமையும் இருக்கணும்! - இந்திய அணி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!

சாம்பியன்ஸா ட்ராபி தொடரில் இந்தியா வென்றதற்கு ஒரே மைதானத்தில் விளையாடுவதே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி உட்பட அனைத்து போட்டிகளிலும் வென்று இறுதி போட்டிக்கு சென்றுளது. ஆனால் இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு, அது ஒரே மைதானத்தில் தொடர்ந்து விளையாடுவதே காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திடீரென ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் “ஒரே மைதானத்தில் விளையாடுவதால் மட்டும் இந்திய அணியால் வெற்றிபெற்று விட முடியாது. இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வெளியேற்றியது. அந்த அணியினர் திறமையாக விளையாடி வருகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K