ஜெய்ஸ்வாலின் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸின் பந்து!

vinoth
வியாழன், 24 ஜூலை 2025 (08:02 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதையடுத்து ஆடிய இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி ஆட்டமுடிவில் 4 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் சேர்த்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இன்னிங்ஸின் போது கிறிஸ் வோக்ஸ் வீசிய இடுப்புக்கு மேல் உயரமான பந்தை தடுத்து ஆடினார் ஜெய்ஸ்வால். அப்போது அவரின் பேட்டின் ஹேண்டில் உடைந்து பேட்டில் இருந்து வெளியேறியது. இதையடுத்து அவர் வேறு பேட்டை மாற்றி இன்னிங்ஸை தொடர்ந்தார்.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments