Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டிகளில் முக்கிய சாதனைகளில் தோனியை முந்திய ஜடேஜா!

Written By vinoth
Updated: சனி, 4 அக்டோபர் 2025 (09:03 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.   முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது.

அதையடுத்து பேட் செய்து வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 448 ரன்கள் சேர்த்து ஐந்து விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. இந்த இன்னிங்ஸில் கே எல் ராகுல்,  துருவ் ஜுரேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சதமடித்து அசத்தினர்.

இந்த இன்னிங்ஸில் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்த ஜடேஜா ஒரு முக்கியமான சாதனையையும் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் விளாசிய ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் இதுவரை 90 சிக்சர்கள் விளாசியுள்ளார். முதல் இடங்களில் 90 சிக்ஸர்களோடு ரிஷப் பண்ட் மற்றும் சேவாக், இருக்க மூன்றாம் இடத்தில் ரோஹித் ஷர்மா 88 சிக்ஸர்களோடு உள்ளார்.
 

எல்லாம் காட்டு

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

அடுத்த கட்டுரையில்
Show comments