Daily Horoscope

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

Written By vinoth
Updated: புதன், 2 ஜூலை 2025 (15:35 IST)
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.

மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி சி எஸ் கே அணியில் இணையப் பேச்சுவார்த்தை நிலவுவதாக கிசுகிசுக்கள் வெளியாகின.  இந்நிலையில் சி எஸ் கே நிர்வாகி ஒருவர் சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய அணி நிர்வாகம் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளதால் இந்த தகவலின் உண்மைத் தன்மை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சஞ்சு சாம்சனை அணியின் உள்ளேக் கொண்டு வருவதே ருத்துராஜைக் கழட்டிவிடதான் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சீசனில் அவர் காயம் காரணமாக விலகினார். ஆனால் தோனிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதனால் சஞ்சு சாம்சன் வந்தால் தோனிக்குப் பிறகு கீப்பராகவும், ருத்துராஜுக்குப் பதில் கேப்டனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிஎஸ்கே திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments