2011 உலகக்கோப்பையில் சூதாட்டம் நடந்தது – இலங்கை அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

வெள்ளி, 19 ஜூன் 2020 (08:09 IST)
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போது அதில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து உலகக்கோப்பை தொடரை நடத்தினர். இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 274 ரன்கள் சேர்க்க, இந்தியா கம்பீர் மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில் தற்போது அந்த இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸீங் நடந்ததாகவும் இலங்கை அணி விலைபோய் விட்டதாகவும், அந்நாட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்காமகே குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ‘2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் பிக்ஸிங் செய்யப்பட்டது. 2011 அல்லது 2012-ம் ஆண்டு போட்டியா என உறுதியாகத் தெரியவில்லை. அந்த ஆட்டம் நாங்கள் வெல்ல வேண்டிய ஆட்டம். ஆனால் பிக்ஸிங்கில் எந்த வீரர்களும் ஈடுபடவில்லை. சில கட்சிகள் ஈடுபட்டன.’ எனக் குற்றச்சாட்டை வைக்க அது இப்போது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஆட்டக்காரர் மகிளா ஜெயவர்த்தனா ‘இலங்கையில் தேர்தல் நெருங்கி விட்டது. அதனால் சர்க்கஸ் வேலை தொடங்கிவிட்டது.’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி.. நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

உலகக்கோப்பை கால்பந்து தொடர்.. இன்று இறுதிப்போட்டி.. கோப்பையை வெல்வது அர்ஜெண்டினா? பிரேசில்?

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா: மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டம்!

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments