திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஜூலை 2018 (16:31 IST)

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம்: விவரம் உள்ளே...

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
 
டி200 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து ஒருநாள் தொடர் வரும் 12 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில், பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் டி20 போட்டியில் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டார். 
 
தற்போது ஒருநாள் போட்டிக்கான அணியில் பும்ராவுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக பும்ரா அணியில் சேர்ந்துவிடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
 
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்:
 
விராட் கோலி, ஷிகர் தவண், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், சர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.