Daily Horoscope
✕

இரண்டாவது டி 20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

Written By vinoth
Updated: திங்கள், 27 நவம்பர் 2023 (07:17 IST)
இந்தியாவுக்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதில் முதலில் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ருத்துராஜ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஆஸி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்ததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
 

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments