புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (18:49 IST)

227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி இஷான் கிஷானின் இரட்டை சதம் மற்றும் கோலியின் சதம் ஆகியவற்றின் மூலம் 409 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷான் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலெயே  இதுதான் அதிவேக சதம்.

அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும். 23 வயதாகும் இஷான் கிஷான் குறைந்த வயதில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதையடுத்து 410 ரன்கள் என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணி  182 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் தொடரை பங்களாதேஷ் அணி ஏற்கனவே வென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.