இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளிலேயே இதுதான்.. மோசமான சாதனையை நிகழ்த்திய அடிலெய்ட் டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அடிலெய்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த டெஸ்ட்டில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது.
முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது. அதை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டி இரண்டரை நாட்களில் முடிந்தது. மொத்தமே 1031 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் மிகக் குறைந்த பந்துகள் வீசப்பட்டு நிறைவடைந்த போட்டி என்ற மோசமான சாதனையை இந்த போட்டி நிகழ்த்தியுள்ளது.