Daily Horoscope
✕

டி20யில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!

Updated: வெள்ளி, 29 ஜூன் 2018 (18:03 IST)
இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டி இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் நோக்கில் களமிறங்கவுள்ளது. 
 
டி20 கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டது முதல் இந்திய அணி 100 போட்டிகளில் விளையாடி உள்ளது. அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இந்தியாவுக்கு 100வது டி20 போட்டியாக அமைந்தது.
 
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 100 டி20 போட்டிகளில் விளையாடி அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 
 
இந்தியாவை அடுத்து அடுத்தடுத்த இடங்களில் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments