செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (16:12 IST)

இவர் தான் அடுத்த தோனி - சுரேஷ் ரெய்னா கருத்து

Dhoni Raina
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை, முன்னால் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் இந்தியா வெண்று தொடரை வென்றது.
 
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  நடைபெற்ற 4வது டெஸ்ட்  போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ( 90 ரன் மற்றும் 37 ரன்) ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே அவரை தோனியுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
 
இந்தப் போட்டி குறித்து முன்னாள் வீரர்  சுரேஷ் ரெய்னா வித்தியாசமாய் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  ''இத்தொடரில் இளம் வீரர்களை சரியாக வழி நடத்தி சிறப்பாக கேப்டன்ஷி செய்த ரோஹித் சர்மா அடுத்த எம்.எஸ்.தோனியைப்போல செயல்படுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,''ரோஹித் தான் அடுத்த எம்.எஸ்.தோனி. அவர் தன் சேவையை சிறப்பாகச் செய்ததுடன்  நிறைய இளம்   வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார். சவுரவ் கங்குலி அணி வீரர்களுக்கு நிறைய  ஆதரளித்தார். தோனி, அணியை முன்னின்றி நடத்தினார். அதன்பின்னர், அதே வழியில் பயணிக்கும் ரோஹித் அபாரமான கேப்டன்'' என்று புகழ்ந்துள்ளார்.