திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (15:52 IST)

மூன்று போட்டிகளிலும் கோலியின் விக்கெட்டை எடுத்த பவுலர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் கோலியின் விக்கெட்டை ஜோஷ் ஹேசில்வுட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி 302 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி 63 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆனார். இந்த தொடரில் அவர் பந்தில் கோலி அவுட் ஆவது இது மூன்றாவது முறையாகும். ஒட்டுமொத்தமாக ஹேசில்வுட் கோலியை ஒருநாள் போட்டிகளில் நான்கு முறை அவுட் ஆக்கியுள்ளார்.