ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மே 2022 (10:28 IST)

இதை வருங்கால தலைமுறை நினைவில் வைத்திருக்கும்! – ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சி!

நேற்றையை ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்து அணி கேப்டன் ஹர்திக் பான்ட்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து 131 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம், அறிமுகமான முதல் ஆண்டே ஐபிஎல் கோப்பையையும் வென்று குஜராத் டைட்டன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “இந்த சாம்பியன் பட்டம் எங்களுக்கு முக்கியமான ஒன்று. இனி வருங்கால தலமுறையினர் கண்டிப்பாக இந்த வெற்றியை பற்றி பேசுவார்கள். அறிமுகமான முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்ற அணி என அவர்கள் குஜராத் அணியை நினைவுக் கொள்வார்கள்” என கூறியுள்ளார்.