கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி; கங்குலி போட்ட ட்வீட்!
டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முன்னதாக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரிலிருந்தும் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி “விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட முடிவாகும். அந்த முடிவை பிசிசிஐ மதிக்கிறது. எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் ஒரு சிறந்த வீரர்” என்று தெரிவித்துள்ளார்.