வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (08:15 IST)

எதிரணி வீரர்களோடு சண்டை போட்டிருக்கிறேன்… அதெல்லாம் ஏன் –வீரர்களுக்கு கம்பீர் அறிவுரை!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் அடுத்து இலங்கை தொடரில் இந்திய அணியோடு இணைய உள்ளார். இந்நிலையில் அவர் வீரர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் “ஒரு குழு விளையாட்டு என்பது தனிப்பட்ட சாதனைகளுக்கானது அல்ல. நான் பேட்டை எடுத்தால் போட்டியின் முடிவைப் பற்றி எண்ண மாட்டேன். எனது ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துவேன்.

வீரர்கள் மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடினால் காயம் அடைவார்கள். அதனால் சில வீரர்களுக்கு மட்டும் ஓய்வளித்து சலுகை அளிப்பது என்பது தவறான அணுகுமுறையாகும். அதனால் வீரர்கள் காயத்தில் இருந்து வெளியே வரவேண்டும்.

நான் களத்தில் இருக்கும் போது அணிக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன். எதிரணி வீரர்களிடம் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் அணிக்காகதான். அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ, அதை நாம் செய்ய வேண்டும். அணியின் குறிக்கோளை விட தனிமனிதனின் குறிக்கோள் பெரியதல்ல” எனக் கூறியுள்ளார்.