கோலிய ஒரு கேப்டனா நான் மிஸ் பண்றேன்… உலகக்கோப்பை வென்ற இங்கி. கேப்டன் கருத்து!

புதன், 14 ஜூன் 2023 (11:51 IST)
கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் டெஸ்ட் போட்டிகளை தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்சியில் வழிநடத்திய கோலியை பலரும் இப்போது மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளார் இங்கிலாந்து அணிக்காக உலகக்கோப்பையை வென்ற இயான் மோர்கன்.

சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டி முடிந்ததும் கோலி பற்றி பேசிய மோர்கன் “டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு எப்போதுமே நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வீரர்களுக்கு சவாலை அளிக்கக் கூடியது.  டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக கோலியை மிஸ் செய்வதாக நான் உணர்கிறேன்.  அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். அதே போல டெஸ்ட் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்தார்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments