வெள்ளி, 7 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மார்ச் 2025 (18:04 IST)

குடும்பத்தை அழைச்சிட்டு வரக் கூடாது.. ஸ்லீவ்லெஸ் போடக் கூடாது! - ஐபிஎல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள்?

ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்திய அணி கடந்த ஆண்டு முதலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி, பார்டர் கவாஸ்கர் கோப்பை வரை பல சர்வதேச போட்டிகளில் படுதோல்வி அடைந்த நிலையில் வீரர்களின் Discipline ஐ மேம்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடுகளை பிசிசிஐ கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை ஐபிஎல் போட்டிகளிலேயே அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

இந்த கட்டுப்பாடுகள் வீரர்களின் சிந்தனை விளையாட்டை விட்டு தவறுவதை தவிர்க்கவும், பொதுவெளியில் வீரர்கள் மற்றும் அணியின் கண்ணியத்தை சரியாக வெளிப்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.

 

அதன்படி, பயிற்சிக்கு செல்லும் வீரர்கள் அணியினருக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். பயிற்சி நாட்களிலோ, போட்டி நாட்களிலோ வீரர்களின் குடும்பத்தினரை ட்ரெஸ்ஸிங் அறைக்கு அழைத்துச் செல்லக்கூடாது. மைதானத்திற்கு பயிற்சிக்கு செல்லும்போது அங்கீகார அட்டை கொண்டு செல்ல வேண்டும். போட்டி முடிந்த பின்னர் பேட்டியளிக்கும்போது ஸ்லீவ்லெஸ் டீசர்ட்களை அணியக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K