செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (07:34 IST)

டி வி சேனலை மாற்றக் கூட ஆள் தேடும் சோம்பேறி கம்பீர்.. ரகசியத்தை போட்டுடைத்த தினேஷ் கார்த்திக்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் இருப்பதாகவும், இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் கம்பீரைப் பற்றிய ஒரு ரகசியத்தை தினேஷ் கார்த்திக் போட்டுடைத்துள்ளார்.

அதில் “நாங்கள் ஹோட்டல் ஓய்வறையில் இருந்த போது லாபியில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது கம்பீர் அறையில் இருந்து என்னை அழைத்தார். நான் உள்ளே சென்றபோது ‘அங்கு ரிமோட் இருக்கும். அதை எடுத்து சேனலை மாற்றிவிட்டு போ’ எனப் படுத்துக் கொண்டே சொன்னார். அந்தளவுக்கு அவர் சோம்பேறி” எனக் கூற, அதைக் கேட்ட சகவீரர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.