Daily Horoscope

பினிஷிங் குமார் தோனியின் கடைசி ஓவர் சாதனைகள்!

Written By vinoth
Updated: சனி, 20 ஏப்ரல் 2024 (07:41 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் ஏமாற்றம் அளிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜடேஜா மற்றும் மொயின் அலி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த போட்டியில் 18 ஆவது ஓவரில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடக்கம். இந்த போட்டியில் சில சாதனைகளைப் படைத்தார் தோனி.

இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் தோனி 20 ஆவது ஓவரில் மட்டும் 65 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரில் இதுவரை அடித்துள்ளார். இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கையாகும். அதே போல 19 ஆவது ஓவரில் 40 சிக்ஸர்களும், 18 ஆவது ஓவரில் 39 சிக்ஸர்களும் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments