ஐபிஎல் போட்டிகளில் அதிக சம்பளம் வாங்கிய வீரர்கள்! - தல தோனி முதலிடம்!
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக அணிகள் நீக்க சேர்க்க விரும்பும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும்.
இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தோனி நீடிக்கிறார். மேலும் கடந்த 2008 முதலாக சிஎஸ்கேவிற்கு விளையாடி வரும் தோனி தற்போது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதுடன் மொத்தமாக ரூ.150 கோடி சம்பளம் பெற உள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லில் அதிகமான சம்பளம் பெற்ற வீரராக தோனி முதலிடம் பிடிக்கிறார். அவரை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா 131.6 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், ஆர்சிபி கேப்டன் கோலி 123.6 கோடியுடன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.