Daily Horoscope

சி எஸ் கே அணியின் புதிய கேப்டன் யார் என்ற பேச்சு எழுந்தது.. ஆனால்?- CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

Written By vinoth
Updated: புதன், 13 மார்ச் 2024 (11:17 IST)
ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் “புதிய சீசனுக்காக காத்திருக்க முடியவில்லை. புதிய பொறுப்பு. மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்” எனக் கூறியிருந்தார்.

இதனால் சி எஸ் கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. தோனிக்கு அணியில் வேறு ஏதேனும் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இதுபற்றி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “அணியின் கேப்டன் யார் என்பது குறித்து பேச்சு எழுந்தது. ஆனால் அணி உரிமையாளர் சீனிவாசன், அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. அதை கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் பார்த்துக் கொள்வார்கள்.

அவர்கள் யாரைக் கேப்டன் என்று சொல்கிறார்களோ, அவரை நாம் ரசிகர்களுக்கு கேப்டனாக அறிவிப்போம். அவர்கள் அணியை எப்படி வழிநடத்துவது என முடிவெடுக்கட்டும். நாம் அமைதியாக இருப்போம்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments