Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! ஃபுல் பார்மில் சிஎஸ்கே! – வீழ்த்துமா ராஜஸ்தான்?

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (09:35 IST)
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் மோத இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய சிஎஸ்கே இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி ஒளிபரப்பாகிறது.

இதுவரை முந்தைய போட்டிகளில் 21 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14 முறை சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது, 7 முறை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு சிஎஸ்கேவுக்கே அதிகம் உள்ளது.

எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிஎஸ்கேவுக்கு டஃப் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவில் தோனி, ராயுடு, வாட்சன் போன்றவர்களின் ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படி விளையாடினாலும் ஜடேஜா, ஜாதவ் போன்றவர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments