வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:41 IST)

மேக்ஸ்வெலுக்காக மோதும் சிஎஸ்கே, ஆர்சிபி! – எகிறும் ஏல மதிப்பு!

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியுள்ள நிலையில் மேக்ஸ்வெலுக்காக சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதிக் கொண்டுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெலுக்கு ஆரம்ப ஏலத்தொகையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் மேக்ஸ்வெல்லின் ஏல மதிப்பு ரூ.12 கோடியை எட்டியுள்ளது.