புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:56 IST)

அடிலெய்டில் திடீரென அதிகமான கொரோனா பரவல் – நடக்குமா முதல் டெஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை.

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் அடிலெய்டு கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது. இதனால் மேற்கு மற்றும் வடக்கு மாகாண ஆஸ்திரேலிய பகுதிகள் தெற்கு ஆஸ்திரேலியாவுடன் தங்கள் தொடர்பை துண்டித்துள்ளனர். இதனால் அடிலெய்டில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.