திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (20:01 IST)

’’கூல் கேப்டன்’’ தோனியின் பிறந்தநாள் டிரெண்டிங்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நாளை தனது 3 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் இதுகுறித்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்ற்ய் விளையாடிவருகிறார்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஐபிஎல் 14 வது சீசன் ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது சென்னை அணி கேப்டன் தோனி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் வீரர் கே.எஸ். ராகுல்  தோனியைக் குறித்து புகழ்ந்தார். அதில்,  வாழ்வில் ஏற்றமோ இறக்கமோ  சமநிலையில் இருப்பார் எனப் புகழ்ந்திருந்தார். இது தோனி கூல் கேப்டன் என்பதை அங்கீகரிப்பதாக இருந்தது.

தோனி நாளை தனது 39 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். எனவே அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.