திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 ஜனவரி 2021 (16:03 IST)

37 பந்துகளில் சதமடித்த வீரருக்கு குவியும் பாராட்டுகள் !!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்  அசாருதீன். இவர் 37 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.

கேரள மாநிலம் காசர் கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம் கிரிக்கெட் வீரர் அசாருதீன். இவர் பிறந்தபோது வேறு பெயரை வைக்க இவரது பெற்றோர் நினைத்ததாகத் தெரிகிறது. ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் சிற்ந்த வீரரான அசாருதீனின் பெயரை இவரது அண்ணன் கமருதீன் வைத்துள்ளர்.

இந்நிலையில் இளம் வீரர் தன் பெயருக்கேற்ப கிரிக்கெட்டில் தனது தனித்த அடையாளத்தை நிரூபித்துள்ளார்.

அதாவது, சையத் முஷ்டாக் கோப்பை போட்டியில் அசாருதின் கேரள அணியின் சார்பாக மும்பை அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை புரிந்துள்ளார்.மேலும் இவருக்கு இந்திய அணியின் இடம்பிடிக்கும் வாய்ப்புள்ளதாகப் பலரும் பாராட்டிவாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.3
இவருக்கு பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.