திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (08:41 IST)

ஆசியக் கோப்பை தொடரில் கம்பேக் கொடுப்பார்களா பூம்ரா & ஸ்ரேயாஸ்?

இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் முக்கியமான வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருபவர் பும்ரா. ஆனால் முதுகு வலி காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அவர் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடினார்.

அதே போல நடுவரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரும் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இருவரும் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பிஸியோதரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரையும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு கொண்டுவர பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறுசிறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.