செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (18:55 IST)

மிரட்டிய வங்கதேசம் 264 ரன்கள் குவிப்பு

இந்திய பவுலர்களிடம் அசராமல் விளையாடிய வங்கதேசம் அணி இந்தியா வெற்றிப்பெற 265 ரன்கள் இலக்கு வைத்துள்ளது.


 
 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் ஓவரிலே விகெட்டை இழந்தது. இருந்தும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய வங்கதேசம் அணி 11வது ஓவரில் அடுத்த விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பாலுடன், முஷ்பிக்யூர் ரகிம் இணைந்தார்.
 
இருவரும் சேர்ந்து இந்திய அணியின் பவுலர்களை திணறடித்தனர். இதனால் வங்கதேச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பின் தமீம் இக்பால் ஆட்டமிழக்க வங்கதேச அணி சற்று தடுமாறியது. அவரைத் தொடர்ந்து ஷகீப் அல் ஹசான், மகமுதுல்லா ஆகியோர் தொடர்ந்து வெளியேறினர். 
 
பின்னர் நிலைத்து ஆடிய ரகிம் ஆட்டமிழக்க வங்கதேசம் அணியின் ஸ்கோர் இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது. 7 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் வங்கதேச அணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடியது. மேர்டாஸா 25 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.
 
இறுதியில் வங்கதேச அனி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.