திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 அக்டோபர் 2021 (13:00 IST)

வங்கதேசத்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!

உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன.

டி 20 உலகக்கோப்பைக்கான 12 அணிகளில் 8 அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்டன. இந்நிலையில் மற்ற நான்கு அணிகளுக்கான தகுதிச்சுற்று இப்போது ஓமனில் நடந்து வருகிறது. இதில் வங்கதேச அணியோடு மோதிய ஸ்காட்லாந்து அணி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் சேர்த்தது. எளிய இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணி  ஆரம்பம் முதலே தடுமாறியது. இதனால் 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.