வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 அக்டோபர் 2021 (10:50 IST)

இரண்டு கலைஞர்களை இழந்த இந்தியன் 2 படக்குழு… வருத்தத்தில் கமல்!

இந்தியன் 2  படத்தில் நடித்து வந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இரு கலைஞர்களும் அந்த படத்தை முடிக்காமலேயே இறந்துள்ளனர்.


கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது என்பதும் அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த படத்தின் தாமதத்தால் இப்போது புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. படத்தில் நடித்திருந்த விவேக் காலமாகிவிட்டார். இந்நிலையில் அவர் நடித்திருந்த காட்சிகள் இப்போது நீக்கப்பட்டு வேறொருவரை நடிக்க வைத்து எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல அந்த படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நெடுமுடி வேணுவும் இறந்துவிட்டதால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனராம். குறிப்பாக இந்த இரண்டு கலைஞர்களின் மறைவு கமல்ஹாசனை வெகுவாகப் பாதித்துள்ளதாம்.