செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (21:40 IST)

ராஜஸ்தானை அடுத்து பெங்களூரு அணியும் அதிரடி: 2 முக்கிய வீரர்களை வெளியேற்றியது!

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தொடரை அனைத்து அணிகளும் சந்திக்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தியையும் அதற்கு பதிலாக சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று வெளி வந்த செய்தியையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் ராயல் ராஜஸ்தான் அணியை அடுத்து ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியும் அதிரடியாக இரண்டு வீரர்களை வெளியேற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஆரோன் பின்ச் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரையும் ராயல்ஸ் சேலஞ்ச் பெங்களூரு வெளியேற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து இந்த இரண்டு வீரர்களுக்கு பதிலாக விரைவில் நடைபெறவுள்ள ஏலத்தில் இரண்டு முக்கிய வீரர்களை அந்த அணி ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது