செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (21:32 IST)

பாபர் ஆசம் சுய நலம் பிடித்தவர் – இந்திய வீரர் விமர்சனம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் ஆசம் சுய  நலம் பிடித்தவர் என்று இந்திய வீரர் விமர்சித்துள்ளார்.

நமது அண்டை நாடாக பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்தியது. இதையடுத்து,  தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து வரும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதையடுத்து, ஜிம்பாவே அணியும்  பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதனாம் இந்த அணியின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த  நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாகிஸ்தான் கேப்டன் பாபரை விமர்சித்துள்ளார்.

அதில்,   நீங்கள் உங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு பதில், உங்கள் அணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் போட்ட திட்டம் பலிக்கவில்லை என்றால், கடந்த போட்டியில், பகர் ஜமானை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியிருக்கலாம். ஆனால்,இப்படிச் செய்யவில்லைல் இதற்குப் பெயர் தான் சுய நலம். கேப்டனான நீங்களும், ரிஸ்வானும் தனிப்பட்ட வகையில் சாதனை படைக்கலாம் என்றாலும் அணியை குறித்து யோசியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Edited by Sinoj