இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி – ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டத்தின் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கமாக நடந்து முடித்த மூன்று சுற்றுகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று மூன்று சுற்றுகள் கொண்ட டி20 போட்டிகளின் முதல் போட்டி தொடங்கியுள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. ஒருநாள் போட்டியில் தொடரை கைவிட்ட நிலையில் டி20 போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.