கலக்கிய அஸ்வின்… 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து – வெற்றிக்கு 41 9 ரன்கள் இலக்கு!
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது 578 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி பாலோ ஆன் ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அற்புதமாக பந்து வீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.