செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2022 (10:08 IST)

ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம்… அஸ்வின் சொல்லும் காரணம்!

இந்திய அணிக்கான அடுத்த தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் உருவாகி வருகிறார்.

நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 9 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார். ஆனாலும் அவர் இடம்பெற்ற மகாராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் விரைவில் இந்திய அணிக்காக ருத்துராஜ் கெய்க்வாட் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள அஸ்வின் “ருத்துராஜ் சிறப்பாக விளையாடினாலும், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம்தான். ஏனென்றால் அவர் யார் யாரோடு போட்டி போடுகிறார் என்று பாருங்கள். தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்னா, சுப்மன் கில், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் வேறு இருக்கிறார். அதனால் அவ்வளவு எளிதாக அவர் இந்திய அணியில் இடம்பெற முடியாது” எனக் கூறியுள்ளார்.