1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Bangladesh won india in second ODI

9 விக்கெட் இழந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம்.. இந்தியா தோல்வி1

bang won
9 விக்கெட் இழந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம்.. இந்தியா தோல்வி1
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் இழந்த நிலையில் திரில் வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட  41.2 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேஎல் ராகுல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 73 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்ததால் இந்திய அணி குறைவான ஸ்கோரை பெற்றது. இதனை அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி அவ்வப்போது விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி சீரான ரன்ரேட்டில் உயர்ந்து வந்தது 
 
இந்த நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி 46வது ஓவரில் 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பங்களாதேஷ் பவுலர்களிடம் பணிந்த இந்தியா பேட்ஸ்மேன்கள்… இலக்கு இவ்வளவுதான்!