Daily Horoscope

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின்..!

Written By vinoth
Updated: புதன், 18 டிசம்பர் 2024 (11:29 IST)
தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் அஸ்வின் திடீரென தன்னுடைய சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபகாலமாக அஸ்வினுக்கு வெளிநாட்டுத் தொடர்களில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தது. தற்போது நடந்து வரும் தொடரில் கூட அவர் ஒரு போட்டியில்தான் விளையாடினார். இந்தியாவுக்கு அடுத்த டெஸ்ட் தொடர் 7 மாதங்களுக்குப் பிறகுதான் என்பதால் இப்போது அவர் ஓய்வை அறிவித்துள்ளார் எனத் தெரிகிறது.

எல்லாம் காட்டு

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

அடுத்த கட்டுரையில்
Show comments