செவ்வாய், 4 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 4 மார்ச் 2025 (07:55 IST)

அணியை வழிநடத்துவது பெருமையாக உள்ளது… அஜிங்க்யே ரஹானே!

கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே கே ஆர் அணி. ஆனாலும் அவர் அணிக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை என்பது பலரும் அறிந்தது. அதனால்தான் அதன் பின்னர் கடந்த ஆண்டு நடந்த மெஹா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை.

இதனால் இந்த ஆண்டு அந்த அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டவர்கள் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்தனர். ஆனால் தற்போது புதியக் கேப்டனாக அஜிங்க்யே ரஹானே புதியக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பொறுப்பை ஏற்பது குறித்துப் பேசியுள்ள ரஹானே, “கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாக உள்ளது. சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். போராடி வெற்றி பெறுவோம்” எனக் கூறியுள்ளார்.