Daily Horoscope
✕

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது ஏன்...?

Updated: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (12:40 IST)
 
குழந்தை பிறந்த உடனே இந்த தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில்  ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல்  தடுக்கிறது. 
 
நன்மைகள்:
 
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். வேலைக்குச் செல்லும்  பெரும்பாலானோர், குழந்தைகளுக்கு புட்டியில் பால் கொடுகின்றனர் இது தவறு.
தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில்  கிடைக்கிறது.
 
தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.
 
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது. 
 
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை  ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments