1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட்- 2017-18
Written By Sasikala
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (13:30 IST)

அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த அருண் ஜெட்லி - பட்ஜெட் 2017!

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண்  ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.

 
அரசியல் கட்சிகளுக்கு இந்த (2017) பட்ஜெட்டில் செக்.
 
அரசியல் கட்சிகள் நிதிபெறுவதி்ல் வெளிப்படைத் தன்மை தேவை.
 
அரசியல் கட்சிகள் ஒருவரிடம் இருந்து இனி ரூ.2000 மட்டும ரொக்கமாக பெற முடியும். கட்சிகள் இதுவரையில் ஒருவரிடம்  இருந்து ரூ.20,000 வரை ரொக்கமாக நிதி பெற அனுமதி இருந்தது.
 
கட்சிகளுக்கு காசோலை, மின்னணு முறை மூலம் மட்டுமே நன்கொடை தர வேண்டும். அரசியல் கட்சிகள் நன்கொடை  பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அரசியல் கட்சிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.