திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : புதன், 15 மார்ச் 2017 (14:42 IST)

‘அரசியல் ஆசை இல்லை’ - ஆமிர் கான்

அரசியலில் ஈடுபடும் ஆசை எதுவும் தனக்கு இல்லை என பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆமிர் கான் தெரிவித்து உள்ளார்.

 
 
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தன்னுடைய 52வது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். கேக் வெட்டிய  பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்தார். ‘நீங்கள்  அரசியலுக்கு வருவீர்களா?’ என்ற கேள்விக்கு, அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்றும், கலை மூலமாகவே மக்களுக்கு  நல்லது செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார். 
 
‘ஷாருக் கானுடன் இணைந்து நடிப்பீர்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், ‘இல்லை. கடந்த மாதத்தில் இருமுறை  சந்தித்துக் கொண்டோம். நண்பரின் பிறந்தநாள் பார்ட்டி அது. நீண்ட நாட்கள் கழித்து ஷாருக்கை சந்தித்தது மகிழ்ச்சியாக  இருந்தது. அவருடன் நீண்ட நேரம் செலவிட்டேன். கெட் டு கெதர் பார்ட்டியில் இரண்டாம் முறையாக சந்தித்தோம், அதுவும்  நண்பர்களாக மட்டும்’ என்றார் ஆமிர் கான்.