இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனான பிரபல ஹிந்தி நடிகர்...
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக கருதப்படுபவரான இயக்குநர் சங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் சங்கர் தன் அடுத்த படமான இந்தியன் 2 விலும் நடிகர் அக்ஷய் குமாரையே வில்லனாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் . அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் வியாபார நோக்கை கருத்தில் கொண்டு தான் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதற்கு இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.