புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (10:49 IST)

கழட்டி விட்ட காதலன்.. வீட்டோடு எரித்துக் கொன்ற பிரபல நடிகையின் தங்கை!

Narghis Fakhri

பாலிவுட்டின் பிரபல நடிகையான நர்கீஸ் ஃபக்ரியின் தங்கை அமெரிக்காவில் கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

அமெரிக்காவில் பிறந்த பிரபலமான மாடலான நர்கீஸ் ஃபக்ரி இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவரது தங்கை அலியா ஃபக்ரி அமெரிக்காவில் வசித்து வருகிறார். அலியா நியூயார்க்கை சேர்ந்த எட்வர்ட் ஜேக்கப்ஸ் என்ற நபரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்துள்ளனர். அதன் பின்னர் எட்வர்டை மீண்டும் சமாதானப்படுத்த அலியா மிகவும் முயன்றுள்ளார்.

 

ஆனா எட்வர்ட் சம்மதிக்காததால் ஆத்திரம் கொண்ட அலியா, எட்வர்டின் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதில் எட்வர்ட் ஜேக்கப்ஸும் அவரது தோழி அனஸ்டிசியாவும் வீட்டோடு எரிந்து பலியாகினர். இந்த வழக்கில் அலியாவை அமெரிக்க போலீஸார் கைது செய்த நிலையில், அவர் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K