திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (19:23 IST)

சந்திரமுகி 2: ஜோதிகாவுக்கு பதில் இந்த பாலிவுட் நடிகையா? செட் ஆகுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதற்கிடையில்  சமீபத்தில் டைட்டில் கேரக்டரான ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிம்ரன் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்தார். ஜோதிகாவும் இந்த படத்தில் நடிப்பது குறித்து தன்னை அணுகவில்லை என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.


இந்நிலையில் தற்ப்போது சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் இளம் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை கியாரா அத்வானி காஞ்சனா இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். எனவே அவர் இது போன்ற கதைகளுக்கு பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் க்ரீன் சிக்னல் காட்டி வருகின்றனர்.