நான் ஏன் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டேன்? பிரபல பாலிவுட் நடிகை பேட்டி
நான் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர் என்பதால் தான் அதை வெளியிட்டேன் என பிரபல பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் அண்மையில் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதற்கு பலரும் அவரை விமர்சித்தனர். சமீப காலமாக நடிகைகள் யாரேனும் நிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அவர்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதேபோன்று நடிகை ஈஷா குப்தா சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புகைப்படம் வெளியிட்டது குறித்து நடிகை கல்கி கொச்லின் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
பெண்களாக நாம் ஆண்களின் கண்ணோட்டத்தில் இருந்து சித்தரிக்கப்படுகிறோம். ஆனால் இந்த புகைப்படத்தை எடுத்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர். அதனால்தான் நான் இதை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி பகிர்ந்தேன் என்றார்.