வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:14 IST)

ஒருவழியா பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் பிரபாஸ்

தான் நினைத்தபடியே பாலிவுட் நடிகையை ஜோடியாக்கியுள்ளார் ‘பாகுபலி’ பிரபாஸ்.


 

 
‘பாகுபலி’யின் வெற்றி, பிரபாஸுக்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால், தன்னுடைய அடுத்த படமான ‘சாஹு’வை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப் போகிறார். எனவே, மூன்று மொழி ரசிகர்களுக்கும் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றால், பாலிவுட் நடிகையைத்தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது படக்குழு.
 
பாலிவுட் நடிகைகளிடம் அப்ரோச் செய்தபோது, கான் நடிகர்களுக்குப் பயந்து எந்த நடிகையும் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை. இருந்தும் மனம் தளராமல் முயற்சி செய்த படக்குழுவினர், கடைசியாக ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்காக ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 5 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.