1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (10:23 IST)

போட்டியாளரை நாயுடன் ஒப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் தொகுப்பாளர்

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ்நாட்டில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

 
இந்நிலையில் ஹிந்தியில் தற்போது 11வது சீசன் நடக்கிறது. அதனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கு  வருகிறார். சென்ற வாரம் அவர் ஜுபைர் கானை "நாய்" என திட்டினார். இந்த வாரம் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சல்மான் 'நாய் என கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறினார்.
 
அனைவரும் ஜுபைர் கானிடம்தான் சல்மான் மன்னிப்பு கேட்கிறார் என நினைத்தனர். ஆனால் பின்னர்தான் தெரிந்தது அவர் ஜுபைர் கானிடம் மன்னிப்பு கேட்டவில்லை, நாயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.