வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (13:45 IST)

தியேட்டருக்குள் ராக்கெட் விட்ட பிரபல நடிகரின் பரம ரசிகர்கள்!!

நடிகர் சல்மான் நடிப்பில் டியூப் லைட் திரைப்படம் நேற்று வெளியானது. அப்போது முதல்நாள் காட்சியின் போது அவரது ரசிகர்கள் ராக்கெட் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திடுள்ளது.


 
 
சல்மான் கான் நடித்துள்ள டியூப் லைட் திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. மராட்டிய மாநிலத்தில் மேலகானில் உள்ள ஒரு தியேட்டரில் முதல்நாள் காட்சியின் போது அவரது ரசிகர்கள் ஆர்வமிகுதியில் ராக்கெட்  ஒன்றை தியேட்டரின் உள்ளேயே வெடித்துள்ளனர்.
 
நல்லவேலையாக ராக்கெட் தியேட்டரின் திரையில் பாயாமல் கூரையை பதம்பார்த்தது. இதனால் தீவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
 
பின்னர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்த பின்னர் படக் காட்டிகள் மீண்டும் போடப்பட்டது. இதனால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.