1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:10 IST)

பெருமை பேசிய ரசிகரின் செல்போனை உடைத்த சல்மான்கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர் ஒருவரின் செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது நண்பர்களுடன் இருந்துள்ளார். அப்போது அவரது ரசிகர் ஒருவர், சல்மான் கானிடம் தனது செல்போன் பற்றி பெருமையாக பேசியுள்ளார். 
 
சல்மான் கான் சிரித்துவிட்டு அவரது வேலையை பார்த்துள்ளார். மீண்டும் அந்த ரசிகர் சல்மான் கானிடம் உடையாத செல்போன் குறித்து தொடர்ந்து பெருமையாக பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சல்மான் கான் ரசிகர் கையில் இருந்த செல்போனை வாங்கி தூக்கிப் போட்டுள்ளார். 
 
செல்போன் உடையவில்லை என்பதால் மீண்டும் தூக்கிப் போட்டார் சல்மான் கான். அதிலும் உடையவில்லை என்பதால் மூன்றாவது முறையாக தூக்கிப் போட்டார். அதில் செல்போன் நொறுங்கியது. மேலும் சல்மான் கானுக்கு தற்போதுதான் கோபம் குறைந்துள்ளது என பாலிவுட் துறையினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சல்மான் கானை மீண்டும் கோபமடைய வைத்துவிட்டார்.