கோவை சமூக சேவகரின் கதை - பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்
அமிதாப் பச்சன் நடிப்பில் படங்களை இயக்கிவந்த பால்கி முதல்முறையாக அக்ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் மிஷினை கண்டுபிடித்தவர். பத்மஸ்ரீ விருது பெற்ற அவரது கதையைதான் பால்கி அடுத்து இயக்குகிறார். படத்துக்கு பேட்மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க அக்ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இளையராஜா படத்துக்கு இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.